Wednesday, May 10, 2017

வெளிநாட்டிலிருந்து வந்து இலங்கையில் தங்குபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்

வதிவிட விசா என்பது விசேட தேவைகளுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக இலங்கையரல்லாத ஒருவருக்கு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும்.
முதலீடு அல்லது வேறு கருமங்களுக்காக வதிவிட வசதிகளை வழங்கத் தீர்மானித்துள்ள இலங்கையரல்லாத வெளிநாட்டவர்களுக்கு இது விநியோகிக்கப்படும்.
அதனைப் பெறுபவர்கள் இலங்கையில் தங்கி இருத்தல் மற்றும் அவர்களின் தொழில்சார் பணிகள் மேற்கொள்ளும் போது இந்த நாட்டு மக்களின் நலனுக்கு பங்கம் ஏற்படாது என உரிய அலுவலர் திருப்தியுறும் வேளைகளிலேயே இந்த விசா விநியோகிக்கப்படும்.
வதிவிட விசா பெறும் பொருட்டு வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமொன்றில் குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் இணக்கத்துடன் விநியோகிக்கப்படுகின்ற நுழைவு விசா அனுமதிப் பத்திரத்துடன் இலங்கைக்கு வரவேண்டியது அவசியமாகும்.
நாட்டுக்குள் நுழைவதற்கான விசா அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வேளையில், இலங்கையில் வதிவதற்காக விசா அனுமதி கோரக் கருதுவதாக நீங்கள் குறிப்பிட வேண்டுமென்பதோடு, அதனை நிரூபிப்பதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டுப்பாட்டாளரது அனுமதியின்றி விநியோகிக்கப்பட்டுள்ள நுழைவு விசாவினை வதிவிட விசாவாக மாற்றும் பொருட்டு பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது.
விண்ணப்பப் பத்திர மாதிரியொன்றை பெறக்கூடிய இடம்
கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகம்
வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்தை சமர்ப்பிக்கும் இடம்
உங்கள் விசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.
வதிவிட விசாவுக்கான செல்லுபடியாகும் காலம்
வதிவிட விசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அத்துடன் அதனை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ள முடியும்.
கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகம் தொடர்பான தகவல்கள்
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், 
"சுகுறுபாய", 
சுபுத்திபுர வீதி(Subuthi Dr), 
பத்தரமுல்லை. 
இலங்கை.
தொலைபேசி: +94-11-5329000
தொலைநகல் இலக்கங்கள்: +94-11-2885358
இணையத்தளம்: www.immigration.gov.lk

No comments:

Post a Comment