Thursday, April 26, 2018

நானாட்டான் பிரதேச சபையை திருவுளச்சீட்டின் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றியது!

நானாட்டான் பிரதேச சபையை திருவுளச்சீட்டின் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றியது!

(செய்தியாளர்) 11.04.2018
மன்னார் நானாட்டான் பிரதேச சபையை திருவுளச்சீட்டின் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றியுள்ளது.
திருவுளச் சீட்டின் மூலம் தெரிவு இடம்பெற்றதை தொடர்ந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திருச்செல்வம் பரஞ்சோதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலமையில் நேற்று(11) நானாட்டான் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இத்தெரிவிற்கு முன்னதாக தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு தொடர்பிலான ஒழுங்கு விதிகளை மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் விரிவாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து தவிசாளருக்கான பெயர்களை முன்மொழியுமாறு ஆணையாயர் அழைப்பு விடுதத்திருந்த நிலையில் தமிழ் தேசசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திருச்செல்வம் பரஞ்சோதி அவர்களும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அன்ரன் றோஜர் ஸ்ரான்லின் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதனைத் அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என்பதை ஆணையாளர் ஒவ்வொரு உறுப்பினராக வினாவினர்.
இந்நிலையில் இரகசிய வாக்கெடுப்பிற்கு பெரும்பான்மை ஆதரவு வழங்கப்பட்டது.
இதனை அடுத்து இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் இருவரும் தலா எட்டு வாக்குகளை பெற்று சமநிலையை எட்டினர்.
இந்நிலையில் திருவுளச் சீட்டின் அடிப்படையில் இடம்பெற்ற தெரிவின் போது நானாட்டான் பிரதேச சபைக்கான தவிசாளராக முன்மொழியப்பட்ட தமிழ் தேசியக் கூட்மைப்பைச் சேர்ந்த திருச்செல்வம் பரஞ்சோதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தவிசாளர் தமது பதவிளை பொறுப்பேற்றுக் கொண்டு உப தவிசாளருக்கான தெரிவிற்குரிய அழைப்பை விடுத்தார்.
இதன் போது அணைத்து உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் உப தவிசாளரை தெரிவு செய்யும் படி கேட்டுக் கொண்டனர்.
இதனை அடுத்து உப தவிசாளர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பேதுருப்பிள்ளை லூர்துநாயகம்பிள்ளையின் பெயரும் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மடுத்தின் ஜெயானந்தன் குருஸ் அவர்களது பெயரும் முன்மொழியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பகிரங்க வாக்களிப்பின் போது இருவரும் தலா எட்டு வாக்குகளை பெற்றமையினால் உப தவிசாளர் தெரிவும் திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டது.
இதில் பேதுருப்பிள்ளை லூர்துநாயகம்பிள்ளை நானாட்டான் பிரதேச சபைக்கான உப தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நானாட்டான் பிரதேச சபைக்கு தெரிவாகியிருக்கும் பதினாறு உறுப்பினர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏழு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் சர்பில் ஐந்து உறுப்பினர்களும், தமிழ்த் தசிய விடுதலைக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் உள்ளடங்குகின்றனர்.
தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவின் போது அமைச்சர்களான றிஸாட் பதியுதின், அமிர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
( வாஸ் கூஞ்ஞ)
LikeShow More Reactions
Comment

No comments:

Post a Comment